கனடாவில் வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்த பாதசாரியின் சடலம் மீட்பு
கனடாவில் வாகனமொன்றில் மோதுண்டு உயிரிழந்த பாதசாரியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நியூமார்க்கட் பகுதியின் பேல்ஸ் மற்றும் வோர்டன் அவன்யூ என்பனவற்றுக்கு அருகாமையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வாகனமொன்றில் மோதுண்ட காரணத்தினால் குறித்த பாதசாரி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எப்பொது இந்த விபத்து இடம்பெற்றது என்பது தெரியவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும், அண்மையில் இந்த விபத்து இடம்பெற்றிருக்க வேண்டுமென ஊகம் வெளியிட்டுள்ளனர்.
சடலத்தை மீட்டதன் பின்னர் விசாரணைகளுக்காக குறித்த பகுதியின் வீதிகள் சில மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.