நேன்சி பெலோசியின் கணவர் தாக்கப்பட்டது வெறுக்கத்தக்க செயல்!
அமெரிக்காவின் மக்களவை நாயகர் நேன்சி பெலோசியின் கணவர் தாக்கப்பட்ட சம்பவத்தை வெறுக்கத்தக்க செயல் என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
பெலோசியைச் சந்தித்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்திய ஓர் ஆடவர் சான் பிரான்சிஸ்கோ (San Francisco) நகரில் உள்ள அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெலோசியின் கணவர் பால் பெலோசியைச் சுத்தியலால் தாக்கினார்.
அதேவேளை அமெரிக்காவில் நவம்பர் 8ஆம் தேதி தவணைக்கால நடுப்பகுதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்தத் தாக்குதல் அரசியல் வன்முறை பற்றிய அச்சங்களை எழுப்பியுள்ளது.
மண்டையோட்டில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கும் வலது கையில் ஏற்பட்ட காயங்களுக்கும் திரு. பெலோசிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதேவேளை அமெரிக்காவின் துணையதிபர் கமலா ஹாரிஸ் , பெலோசியின் கணவர் தாக்கப்பட்டதை சாடியுள்ளார்.