பிரான்ஸில் காட்டுத்தீ! 474 பேர் அதிரடியாக கைது
பிரான்ஸில் கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் காட்டுத்தீ ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 474 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரலாறு காணாத வெப்ப அலையால் பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் கடுமையான காட்டுத்தீயை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 183 பேர் சிறார்கள் என பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காட்டுத்தீ
கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் திட்டமிட்டு காட்டுத்தீ ஏற்படுத்தியதாகவும், ஏனையோர் தற்செயலாக தீ ஏற்படக் காரணமாக இருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் 24 மணி நேரத்திற்கும் குறைவான காலப்பகுதியில் சுமார் 1,100 ஹெக்டேர் (2,700 ஏக்கர்) அளவிலான வறண்ட பைன் காடு தீக்கிரையாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.