பிரித்தானியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட கனேடிய இளம்பெண்: அஞ்சலி கூட்டத்தில் திரண்ட மக்கள்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட கனேடிய இளம்பெண்ணிற்காக முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வெர்னான் பகுதியை சேர்ந்தவர் 19 வயதான Ashley Wadsworth. காதலருடன் வாழும் பொருட்டு கடந்த ஆண்டு நவம்பரில் பிரித்தானியாவுக்கு சென்றுள்ள நிலையில், 2022 பிப்ரவரி 1ம் திகதி அவரது காதலரான Jack Sepple என்பவரால் கொடூரமாக கத்தியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து 23 வயதான Jack Sepple கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரித்தானியாவின் செம்ஸ்ஃபோர்டில் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சியில் சுமார் 150 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆஷ்லே வாட்ஸ்வொர்த் கொல்லப்பட்ட பகுதிக்கு மிக அருகாமையிலேயே அஞ்சலி கூட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில், வாட்ஸ்வொர்த்தின் சகோதரி ஹெய்லி சிறப்பு அஞ்சலி ஒன்றையும் நிறைவேற்றியுள்ளார்.
தற்போது அவரது உடலை கனடாவுக்கு கொண்டு வரும் வகையில் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி வருகின்றனர். 50,000 டொலர் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 17, 000 டொலர்கள் திரட்டப்பட்டுள்ளதாக வாட்ஸ்வொர்த் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை Jack Sepple நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் சார்பில் இதுவரை எவரும் பிணை கேட்டு மனுவளிக்கவில்லை என்றே தெரிய வந்துள்ளது.