கனேடிய மாகாணமொன்றில் மக்கள் அமெரிக்காவுடன் இணைய ஆதரவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் , கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்க இருப்பதாக மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், கனேடிய மாகாணமொன்றின் மக்கள் அமெரிக்காவுடன் இணைய ஆதரவு தெரிவித்துள்ளது குறித்த செய்திகள் வெளியாகிவருகின்றன.
கனேடிய மாகாணமான ஆல்பர்ட்டாவில், சுமார் 30 முதல் 40 சதவிகித மக்கள் கனடா அரசு மீது அதிருப்தி கொண்டுள்ளதாக ஆல்பர்ட்டா மாகாண பிரீமியரான டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரிவினைக்கு ஆதரவான அமைப்பு ஒன்று, கனடாவிலிருந்து பிரிவது தொடர்பில் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் அந்த பிரேரணையில் கையெழுத்திட்டுவரும் நிலையில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் கையெழுத்திட்டால், அந்த பிரேரணை வாக்கெடுப்புக்கு வரும் எனவும் , அவ்வாறு வாக்கெடுப்புக்கு வரும்போது தான் அதை அனுமதிப்பதாக முடிவு செய்துள்ளதாகவும் ஆல்பர்ட்டா மாகாண பிரீமியரான டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார்.