கனடாவில் ஆபத்தான பாக்டீரியா தாக்கம் குறித்து எச்சரிக்கை
கனடாவின் மானிடோபா பகுதியின் ஆபத்தான பாக்டீரியா நோய் தொற்று பரவுகை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாக்டீரியா தாக்கத்துக்கு உள்ளாகும் மக்கள் கடுமையாக நோய்வாய்ப்படுவதாகவும் உயிராபத்து ஏற்படக்கூடியது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிகவும் அரிய வகையிலான பாக்டீரியா தாக்கம் பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மானிட்டோபா சுகாதார அதிகாரிகள் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபத்தான மூளையுறை அழற்சி நோய் ஏற்படுவதாகவும் இது மூளை மற்றும் முள்ளந்தண்டு பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய பொது சுகாதார முகவர் நிறுவனம ஒன்றாரியோ மற்றும் மானிட்டோபா பகுதிகளில் இந்த ஆண்டில் குறித்த பாக்டீரியா தொற்று பரவுகை குறித்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
மனிடோபாவில் ஆண்டொன்றுக்கு ஆறு நோயாளிகள் பதிவாகின்ற போதிலும் இந்த ஆண்டில் சுமார் 19 பேர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.