நாட்டு மக்கள் நன்றி கெட்டவர்கள் – வஜிர அபேவர்தன
இந்த நாட்டு மக்கள் நன்றிகெட்டவர்கள் என முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
மின்னேரிய கடவுள் என போற்றப்பட்ட சீ.பீ.டி. சில்வா மக்கள் தோற்கடித்தனர், இலவச கல்வியின் தந்தை சீ.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரவை தோற்கடித்து துரத்தினர், அநகாரிக தர்மபாலவை இழிவுபடுத்தினர் என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளில் நாட்டை மீட்டு எடுத்த ரணில் விக்ரமசிங்கவிற்கு மக்கள் நன்றி பாராட்டத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பலபிட்டிய பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வங்குரோத்து அடைந்த நாட்டையே ரணில் பொறுப்பேற்று இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் உதவியுடன் மீட்டு எடுத்தார் என தெரிவித்துள்ளார்.
ஏனையவர்களின் ஆட்சிக் காலத்தில் பொய்கூறி குரோதத்தை பிரசாரம் செய்தனர் எனவும் இதனால் ரணில் விக்ரமசிங்க இம்முறை தேர்தலில் தோல்வியடைந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகனங்களை கைவிட்டுச் சென்றுள்ளதாக கண்கட்சி நடத்தாது, விட்டுச் சென்றவர்களை அரசாங்கம் கைது செய்ய வேண்டுமென வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.