ஜெர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
ஜெர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டிற்காக காத்திருக்கும் மக்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, ஜெர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டில் டிஜிட்டல் நடைமுறையை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. €49 யூரோ பெறுமதியான ஜெர்மனி முழுவதும் பயணம் செய்யக்கூடிய பிரயான அட்டை என்பது டிஜிடல் வடிவம் பெறுமா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் €49 பெறுமதியான பிரயாண அட்டை எவ்வகையில் அமையும் என்று பலரிடம் இந்த கேள்வி இருக்கின்றது. இதே வேளையில் ஜெர்மனியின் சமஸ்டி போக்குவரத்து அமைச்சர் பிஸ்லின் அவர்கள் இந்த பிரயாண அட்டையானது டிஜிடல் முறையில் அமைய வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.
இதேவேளையில் பொது போக்குவரத்து அமைப்புக்கள் தற்காலிகமாக இவ்வகையான டிஜிடல் முறையை முற்றுமுழுதாக் அமுல்ப்படுத்த கூடாது என்றும் கருத்தை தெரிவித்திருக்கின்றார்கள் ஒரு மாதத்திற்கு 49 யூரோக்கள் செலவாகும் பொதுப் போக்குவரத்து அனுமதிச்சீட்டு எதிர்வரும் மே மாதம் அறிமுகப்படுத்த ஜேர்மனி விரும்புகிறது.
இந்த பயணச்சீட்டு நாடு முழுவதும் செல்லுபடியாகும். முன்னதாக 9 யூரோ டிக்கெட் திட்டம் ஜேர்மனியில் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. அதனை பின்பற்றி, அதிகாரிகள் நிதியுதவிக்கு உடன்பட்டால் இப்போது இந்த புதிய 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் ஜெர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டில் டிஜிட்டல் நடைமுறையை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.