உய்குர் முஸ்லிம்களுக்கு முகாம்களில் கொடுமை ; ஆய்வு செய்ய வலியுறுத்தும் 40 நாடுகள்
சீனாவின் சின் சியாங் மாநிலத்துக்குச் செல்ல உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என, 40க்கும் மேற்பட்ட நாடுகள், ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை மன்றத்தில் வலியுறுத்தியுள்ளன.
சீனாவில் சிறுபான்மையினராக உள்ள உய்குர் முஸ்லிம்கள், சின் சியாங் மாநிலத்தில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்படுகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐ.நா சபையின் மனித உரிமை மன்றத்தில், 40க்கும் மேற்பட்ட நாடுகள் , கனடாவில், பழங்குடியின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து மிகுந்த கவலைப்படுவதாக ஐ.நா மனித உரிமை மன்றத்தில் சீனப் பிரதிநிதி கூறியுள்ளார்.
ஆனால், சீனாவின் சின்சியாங் மாநிலத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் சட்டத்துக்குப் புறம்பாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாவது குறித்து பல்வேறு அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஆய்வு செய்ய சீனாவின் சின் சியாங் மாநிலத்துக்குச் செல்ல உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். மேலும் இதுகுறித்து ஐ.நா ஆய்வு நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.