வெளிநாடொன்றில் கரடியுடன் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட நபரால் ஏற்பட்ட பரபரப்பு!
கலிபோர்னியா ஆளுநரை திரும்பப் பெறுவதற்கான பொதுவாக்கெடுப்புப் பிரச்சாரத்திற்கு குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜான் காப்ஸ் என்பவர் 500 கிலோ எடை கொண்ட கரடியுடன் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாத் தொற்றை முறையாக கையாளாததால் கலிபோர்னியா ஆளுநரை திரும்பப் பெறுவதற்கான பொதுவாக்கெடுப்பு பிரசாரம் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த டேக் ( tag ) என்ற 500 கிலோ கரடியை சேக்ரமெண்டோ நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்திற்கு அழைத்து வந்த ஜான் காப்ஸ் என்பவர், கலிபோர்னியாவின் முன்னேற்றத்திற்கு மிருகத்தனமான மாற்றங்கள் தேவை என்றும் தான் ஆளுநராக ஆனால் வரிகளை குறைத்து அனைத்து பொருட்களையும் மலிவாக்குவேன் என்றும் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரச்சாரத்துக்கு கரடியை கூட்டி வந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.