நாடி துடிப்பே இல்லாமல் நபர் உயிர் வாழ்ந்துள்ள அதிசயம்
மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கியமான நாடி துடிப்பே இல்லாமல் ஒருவர் உயிர் வாழ்ந்துள்ள அதிசயம் இடம் பெற்றுள்ளது.
இவர் 55 வயதுடைய கிரேக் லூயிஸ் என்று தெரிய வந்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு amyloidosis என்ற தன்னுடன் எதிர்ப்பு சக்தியால் (autoimmune disease) பாதிக்கப்பட்ட கிரேக் லூயிஸின் உடலில் அசாதாரணமான புரதங்கள் உருவாகி இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து பிரபல இரு மருத்துவர்கள் கிரேக் லூயிஸுக்கான ரத்த ஓட்டத்தை தடுக்காமல் இருக்க பல்ஸ் இல்லாத கருவி ஒன்றை பொருத்த தீர்மானித்துள்ளனர்.
இயந்திரம்
அதன்படி அந்த இயந்திரத்தை உருவாக்கியதோடு அதனை 50 கன்றுகளிடம் சோதித்து பார்த்துள்ளனர்.
அதாவது அந்த விலங்குகளின் இதயத்தை நீக்கிவிட்டு அவர்கள் உருவாக்கிய கருவியை பொருத்தி பார்த்ததில் இதயத்துக்கான ரத்தம் செல்லாத போதும் அந்த கன்றுகள் உயிர் வாழ்ந்துள்ளன. இதன் மூலம் மருத்துவர்களின் அந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
ஆனால் எதிர்பாராத விதமாக லூயிஸின் கிட்னி மற்றும் கல்லீரல் தீவிரமாக பாதிக்கப்பட்டதால் அவரது உடல்நிலை மோசமானதோடு அதே 2011ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
மேலும் இதில் குறிப்பிடத்தகுந்த விடயம் என்னவென்றால், கிட்டத்தட்ட ஒரு மாதமாக நாடித் துடிப்பே இல்லாமல் லூயிஸ் உயிர் வாழ்ந்தார் என்றும், ரத்த ஓட்டத்திலும் எந்த இடையூறும் ஏற்பட்டிருக்கவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.