குளிர்பானம் குடித்து திடீரென உயிரிழந்த நபர்: அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

Death China Beijing Coca-Cola
By Shankar Sep 27, 2021 08:45 PM GMT
Shankar

Shankar

Report

பிரபல நாடொன்றில் விருந்தோம்பால் நிகழ்வில் கோகோ கோலா குளிர்பானத்தை குடித்தவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் சீனாவில் தலைநகரமான பெய்ஜிங்கில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,  

நண்பர்கள் பார்ட்டியில் கலந்து கொள்ளும்போது பீர் அல்லது பெப்சி, கோகோ கோலா, செவன் அப் உள்ளிட்ட குளிர்பானங்களை ஒரே நேரத்தில் அதிகம் குடிப்பவர்கள் யார்? அல்லது விரைவாக குடிப்பவர்கள் யார்? என்ற போட்டியை நடத்துவார்கள்.

கல்லூரி நண்பர்கள் அல்லது வேலை செய்யும் இடத்தில் உள்ள நண்பர்கள் இந்தமாதிரியான போட்டிகளில் அடிக்கடி ஈடுபடுவதை பார்க்க முடியும்.

சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரத்தில் நபர் ஒருவர் அண்மையில் 1.5 லிட்டர் கோகோ கோலா பானத்தை வாங்கி, 10 நிமிடத்தில் குடித்துள்ளார்.

அடுத்த 6 மணி நேரம் கழித்து அவருடைய வயிறு உப்புசமாகி, வீங்கியுள்ளது. நேரம் செல்ல செல்ல, அவருக்கு வயிற்று வலியும் அதிகரித்துள்ளது. கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் குடும்ப உறுப்பினர்கள் அவரை சாவோயாங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு உடல் நலப்பிரச்சனைகள் எதுவும் இல்லை எனத் தெரியவந்தது. பின்னர், சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கும்போது குடலின் சுவர் மற்றும் போர்டல் நரம்பில் நியூமேடோசிஸ் என்ற அசாதாரண வாயு இருப்பது கண்டறியப்பட்டது.

அதிகப்படியான குளிர்பானத்தை பருகியவுடன், கல்லீரலில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உருவாகி, இஸ்கெமியா உருவாகியுள்ளது. இதனால், நரம்பு பாதிப்புகள் உருவாகி அவர் உயிரிழப்பை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. சிகிச்சையில் இருக்கும்போதே அந்த நபர் உயிரிழந்தது வைத்தியர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

அதிகப்படியான குளிர்பானத்தை பருகி, அசாதாரண வாயு அடைப்பால் அந்த நபர், தன் வாழ்க்கையை பறிகொடுக்க நேரிட்டுள்ளதாக வைத்தியர்கள் விளக்கம் அளித்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த நபர் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஆனால், அவர் கோகோ கோலாவை அதிகம் பருகிய காரணத்தினால், உடலில் உருவாகிய வாயுப் பிரச்சனையால் உயிரிழப்பை எதிர்கொண்டுள்ளார் என்ற தகவலை மட்டும் சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US