இணையவழித் தாக்குதலால் முடக்கப்பட்ட பெற்றோல் நிலையங்கள்
ஈரானில் இணையவழித் தாக்குதல் காரணமாக பெட்ரோல்-டீசல் நிரப்பு நிலையங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டின் 70 சதவீத பெட்ரோல் நிலையங்களின் செயல்பாடுகள் திங்கட்கிழமை முடங்கின.
மென்பொருள் கோளாறு காரணமாக இந்த முடக்கம் ஏற்பட்டது.
இணையவழியில் ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இது விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும். எனவே, பொதுமக்கள் பீதியடைந்து பெட்ரோல் நிலையங்களில் குவியவேண்டாம் என்று அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இந்த இணையவழித் தாக்குதலுக்கு ‘கொஞ்ஜெஸ்கே தராண்டே’ என்ற ஊடுருவல் குழு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதே போன்று இதற்கு முன்னர் நடத்தப்பட்ட இணையவழித் தாக்குதல்களுக்கு இந்தக் குழு பொறுப்பேற்றுள்ளது.