தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை உடனே நிறுத்தவேண்டும்: கனடா எதிர்க்கட்சித் தலைவர்
கனடா தனது தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என கனடா எதிர்க்கட்சித் தலைவரான Pierre Poilievre வலியுறுத்தியுள்ளார்.
தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தால் கனேடிய பணியாளர்கள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாகவும், ஊதியங்கள் மீது அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளார்.
இந்த ஆண்டில் கனடா 82,000 வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு பணி வழங்கத் திட்டமிட்டுள்ள நிலையில், கனடா எதிர்க்கட்சித் தலைவரின் திட்டம் அவர்களுக்கு சிக்கலை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது.
தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று Pierre Poilievre வலியுறுத்தினாலும், பணியாளர்கள் கிடைப்பதற்கு அரிதான பணிகளான விவசாயம் போன்ற துறைகளில் வெளிநாட்டுப் பணியாளர்களை அனுமதிக்கலாம் என்றும், வேலைவாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதன் அடிப்படையில் பணி அனுமதிகள் வழங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.