பிள்ளையான் தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர், சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பிள்ளையானை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (24) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த வழக்கில், சிவநேசதுரை சந்திரகாந்தன் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் (24) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.