நடுவானில் கடவுச்சீட்டை மறந்த விமானியால் ஏற்பட்ட பரபரப்பு
அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு பறப்பை மேண்கொண்ட விமானம் நடுவானில் பறந்த போது, கடவுச்சீட்டு கொண்டு வருவதை மறந்தது விமானிக்கு நினைவுக்கு வந்ததை அடுத்து அந்த விமானம் மீண்டும் அமெரிக்காவிலேயே தரையிறக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 22ம் திகதி அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 257 பயணிகளுடன் யுனைட்டைட் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் சீனாவின் ஷாங்காய் நகருக்கு பறப்பை மேற்கொண்டது.
விமானம் கிளம்பி இரண்டு மணி நேரம் கடந்த நிலையில், கடவுச்சீட்டு கொண்டு வராததை விமானி உணர்ந்தார். இது குறித்து அவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தரையிறக்கப்பட்டது.
இதனையடுத்து மாற்று விமானம் மூலம் பயணிகள் ஷாங்காய் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.