பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஒருவர் பலி
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாங்கூவரிலிருந்து வடகிழக்கே 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லிலூயெட் பகுதியில் புதன்கிழமை மாலை ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானது.
இதில் விமானத்தை ஓட்டிய ஒரே நபர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்துக்கான காரணங்கள்
லிலூயெட் விமான நிலையத்திற்கு அருகில் விமானம் தரையில் மோதி விழுந்ததாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமானியை விமானத்திலிருந்து மீட்டபோது அவர் மயக்க நிலையில், உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிர் காப்பாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,” என தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (Transportation Safety Board) விபத்து இடத்திற்கு விசாரணை குழுவை அனுப்பியுள்ளது.
புஷ்மாஸ்டர் சுபர் 22 22 என்ற சிறிய விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விசாரணை அதிகாரிகள் விபத்துக்கான காரணங்களை ஆராயும் நிலையில், ஆரம்பக் கணக்கெடுப்பு முடியும் வரை கூடுதல் தகவல்கள் வெளியிடப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.