ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை வைரம் : வியந்த மக்கள்
ஆப்பிரிக்க நாடான அங்கோலாவில் உள்ள லுலோ சுரங்கத்தில் அரிய வகையான மிகப்பெரிய வைரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 300 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய இளஞ்சிவப்பு வைரம் வைரமாகும் என ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக லுகாபா டயமண்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 170 காரட் எடை கொண்ட இந்த இளஞ்சிவப்பு நிற வைரமானது தி லுலோ ரோஸ் என அழைக்கப்படுகிறது.
லுலோ சுரங்கத்தில் இருந்து கண்கவர் வைரம் எடுக்கப்பட்டதன் மூலம் உலக அளவில் அங்கோலா முக்கிய இடத்தில் தொடர்ந்து உள்ளதென அங்கோலாவின் கனிம வள அமைச்சர் டயமன்டினோ அசெவெடோ தெரிவித்துள்ளார்.
லுலோ ரோஸ் வைரத்தின் உண்மையான மதிப்பை அறிய அதனை மெருகூட்ட வேண்டும். அவ்வாறு மெருகூட்டும் போது அதன் எடையில் சுமார் 50 சதவீதத்தை இழக்க நேரிடும்.
இந்த வைரமானது சர்வதேச டெண்டரில் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படும்.
இது அதிக விலைக்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறதாக கூறப்படுகிறது. ஹாங்காங்கில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் சுமார் 59.6 காரட் பிங்க் ஸ்டார் வைரம், 71.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது.
இதுவரை விற்கப்பட்ட வைரங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்டது இதுவாகும்.