மனைவியை காப்பாற்ற ரஷ்ய கூலிப்படையில் இணைந்த இலங்கையரின் பரிதாப நிலை!
தன் மனைவியை காப்பாற்ற ரஷ்ய கூலிப்படையில் இணைந்த இலங்கையர் குறித்த தகவலொன்று வெளியாகியுள்ளது. குறித்த நபர் குருநாகல் – கும்புக்கெட்ட பிரதேசத்த்தை சேர்ந்த எரந்த சிந்தக தென்னகோன் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் ரஷ்ய போர்க்களத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, கடந்த 9ம் திகதி எரந்த சிந்தக தென்னகோன் என்ற குடும்பஸ்தர் இலங்கை திரும்பியுள்ளார்.
போர்க்களத்தில் தலையில் துப்பாக்கிச்சூடு
ரஷ்யாவில் வேறொரு வேலையில் ஈடுபட்டிருந்த வேளையில் ரஷ்ய கூலிப்படையில் இணைந்து போர்க்களத்தில் தலையில் துப்பாக்கிச்சூடுபட்டதாக அவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
ரஷ்யாவில் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பித்து நண்பர் ஒருவரின் உதவியுடன் இலங்கை வந்துள்ளார்.
அதேசமயம் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவியின் அறுவை சிகிச்சைக்கு பணம் திரட்டுவதற்காக குறித்த நபர், ரஷ்ய கூலிப்படையில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது
எனினும் , அவர் நாடு திரும்புவதற்கு முன்பே அவரது மனைவி கடந்த மார்ச் மாதம் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.