தாய்லாந்தில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு திட்டம்
தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களையடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு , அந் நாட்டின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சயாசாய் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா கடந்த வாரம் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்டதையடுத்து தாய்லாந்தில் ஆட்சி அதிகாரம் தற்போது நிலையற்றதாகவுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சி தனது போட்டி வேட்பாளரை ஆதரிக்கும் என்று அறிவித்ததையடுத்து ஆளும் கட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் பியூ தாய் கட்சி புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கத் தயாராக இருந்தாலும், அதற்கு மிகப்பெரிய எதிர்க்கட்சியின் ஆதரவு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மிகப்பெரிய எதிர்க்கட்சியின் முடிவு குறித்து அறிவிக்கப்பட்ட பின்னர், தற்காலிக பிரதமர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்துள்ளதாகவும், தொடர்புடைய ஆணையை நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.