நடுவானில் தீப்பற்றிய விமானம் ; நூலிழையில் உயிர் தப்பிய 273 பயணிகள்
கிரீஸில் இருந்து ஜெர்மனி சென்ற போயிங் 757 விமானம் நடுவானில் தீப்பற்றியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு சென்று கொண்டிருந்த போயிங் 757 ரக விமானம், புறப்பட்ட ஒரு மணிநேரத்துக்குள் நடுவானில் அதன் வலதுபுற என்ஜினில் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து, விமானம் அவசரமாக இத்தாலியின் பிரின்டிசியில் தரையிறக்கப்பட்டதால், விமானத்தில் இருந்த 273 பயணிகள், 8 விமான ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விமானம் புறப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பின்னர் இந்த சம்பவம் நடந்த நிலையில், இத்தாலியின் பிரிண்டிசி நகரில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் மீது பறவை ஏதேனும் மோதியதில் ஏற்பட்ட இயந்திர செயலிழப்பு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.