திடீரென விழுந்து நொறுங்கிய விமானம்: 4 பேருக்கு நேர்ந்த சோகம்!
குரோஷியாவிலிருந்து சால்ஸ்பர்க் நோக்கிச் சென்ற சிறிய விமானம் ஒன்று ஆஸ்திரியாவில் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் அஸ்திரியாவின் சால்ஸ்பர்க் மாகாணத்தில் லின்ட்ஷிங் அருகே நேற்றையதினம் (02-11-2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் சிரஸ் எஸ்ஆர்20 (Cirrus SR20) விமானம் விபத்துக்குள்ளானதாக ஆஸ்திரியா பொலிஸார் தெரிவித்தனர்.
விமானம் குரோஷியாவின் ஜாக்ரெப்பில் இருந்து சுமார் 2 மணித்தியாலத்திற்கு முன் புறப்பட்டுள்ளது.
விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்ந்து இழந்தப் பின்னரே விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின் போது, விமானத்தில் இருந்து 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் இதுவரை எவரது உடலும் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.