109 மாடி கட்டிடத்தின் மீது மோதிய விமானம் ; உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் வான் அளவிற்கு உயர்ந்து நிற்கும் 109 மாடி கட்டிடத்தின் மீது சிறிய வகை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கின் மத்திய வணிகப் பகுதியில் அமைந்துள்ள 528 மீட்டர் உயரமுள்ள சிடிக் டவர் (CITIC Tower / China Zun) வானளாவிய கட்டிடத்தின் மேல் பகுதியில் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்ட Sunward SA 60L Aurora (பதிவு எண்: B-12PP) என்ற இலகுரக விளையாட்டு விமானமாகும்.
இது Shuangyue General Aviation என்ற பயிற்சி நிறுவனத்திற்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்படுகின்றது. கட்டிடத்தின் வெளிப்புறக் கண்ணாடிகள் சேதமடைந்து இடிபாடுகள் கீழே விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை அல்லது காயமடைந்தவர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.