அமெரிக்க குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம் ; பலர் பலி
அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதியில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் பலியானதாக உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான்டியாகோ பகுதியில் சிறிய விமானம் 10 பேருடன் பயணித்த இந்த விமானம் குடியிருப்பு பகுதியில் திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது.
பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமானம் நொறுங்கி விழுந்ததால் 15க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. பல கார்கள் தீயில் எரிந்து நாசமாகின.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடமருகே வசித்த 100க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். விபத்து நடந்த இடமருகே யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.