ஸ்பெயினில் நடுவானில் திடீரென குழுங்கிய விமானம் ; வைரலான வீடியோ
சமீப காலமாக நடுவானில் விபத்துக்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது. தற்போது ஸ்பெயினில் இதுபோன்ற விபத்து நடந்திருப்பது விமான பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஸ்பெயினின் மாட்ரிட்டில் இருந்து உருகுவேயின் தலைநகர் மாண்டிக்கு புறப்பட்ட ஏர் யூரோபா விமானத்தில் 325 பயணிகள் பயணம் செய்தனர்.
விமானம் திடீரென நடுவானில் பயங்கரமாக மோதியது. விமானம் முன்னும் பின்னுமாக அதிர்ந்ததால் பயணிகள் அலறினர். சிலர் தங்கள் இருக்கைகளை இறுக்கமாகப் பிடித்தனர். சீட் பெல்ட் அணியாத பயணிகள் இருக்கையை விட்டு கீழே விழுந்தனர். விமானத்தில் ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது.
ஒரு பயணி விமானத்தின் மேல் தூக்கி வீசப்பட்டார். இதனால் மேல்பகுதியை பிடித்து தொங்கினார். சக பயணிகள் அவரை கீழே இறக்கி காப்பாற்றினர்.
இந்த சம்பவத்தில் 30 பயணிகள் காயமடைந்தனர். இச்சம்பவத்திற்குப் பிறகு பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள நடால் விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் குலுங்கியதில் சில இருக்கைகள் சேதமடைந்தன. இதையடுத்து பயணிகள் வேறு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஏர் யூரோபா வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.
காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், மேலும் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
A Boeing 787 passenger was thrown onto a luggage rack during severe turbulence. About 40 people were also injured
— NEXTA (@nexta_tv) July 2, 2024
The Air Europa flight was en route from Madrid to Montevideo. During the flight, the Dreamliner hit severe turbulence.
The crew decided to make an emergency landing… pic.twitter.com/VifmXYshMs