கனடாவின் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின் அலெக்ஸான்டர் என்ற கிராமப் பகுதிக்குள் தற்போதைக்கு வர வேண்டாம் என எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ பரவுகை காரணமாக இந்த எச்சரிக்கையை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அலெக்ஸான்டர் Alexander என்ற கிராமப்புற மாநகராட்சியின் மேயர் ஜாக் பிரிஸ்கோ கோரியுள்ளார்.
எதிர்வரும் நீண்ட விடுமுறைக் காலத்தில் அந்தப் பகுதிக்கு மக்கள் வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இங்கு பெரும்பாலான பகுதிகள் பருவகால குடில்களால் நிரம்பியுள்ளன. உங்கள் குடில்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வர வேண்டாம். அது பாதுகாப்பான நேரம் வரும்வரை காத்திருக்க வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார்.
மோசமடைந்த இந்த தீயை கட்டுப்படுத்த எளிதாக இருக்க வேண்டுமெனில், அதிகமான மக்கள் இப்பகுதியில் இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.
இந்த பகுதியில் தற்போது மூன்று பெரிய காட்டுத்தீக்கள் எரிகின்றன என்றும், 100-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாகாண அரசு மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.