பிரிட்டனில் 16 வினாடி மாஸ்க்கை கழட்டிய நபரின் பரிதாப நிலை
பிரிட்டனில் 16 வினாடிகள் மாஸ்க்கை கழட்டிய நபருக்கு 1,968.23 பவுண்ட் ஸ்டெர்லிங் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
உலகில் கொரோனாவால் அதிகளவில் பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. மேலும் ஆண்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பல குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் தற்போது பொது இடத்தில் தனது மாஸ்க்கை 16 வினாடிகள் அணியாமல் இருந்த நபருக்கு 1,968.23 பவுண்ட் ஸ்டெர்லிங்அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாம்.
ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்ற கிறிஸ்டோபர் ஓ டூல் என்ற இளைஞர் நீண்ட நேரமாக மாஸ்க் அணிந்திருந்த அசௌகர்யத்தால் மாஸ்க்கை கழட்டி மாட்டியுள்ளார்.
இந்த நிலையில் இடைப்பட்ட அந்த 16 வினாடிகளுக்கு அவருக்கு குறித்த அபராத தொகை விதிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.