சிட்னியில் யூத இலக்கொன்றை தாக்கும் சதிதிட்டம் முறியடிப்பு
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூதஇலக்கொன்றை தாக்குவதற்கான சதிதிட்டத்தை முறியடித்துள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதோடு இதன்போது பெருமளவு வெடிபொருட்களையும் மீட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் கூறியுள்ளனர்.
ஜனவரி 19 ஆம் திகதி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவுஸ்திரேலிய பொலிஸார் கரவன் ரக வாகனமொன்றை வீடொன்றில் மீட்டனர்.
அந்த கரவனில் வெடிபொருட்கள் பெருமளவில் காணப்பட்டதாக நியுசவுத்வேல்ஸ் மாநிலத்தின் பிரதிபொலிஸ் ஆணையாளர் டேவிட் ஹட்சன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெடிபொருட்களை யூதஇலக்கினை தாக்குவதற்கு பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள அவர், அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.