கிரக அந்தஸ்தை இழந்த ப்ளூட்டோ; வெளியான காரணம்!
கிளட் டாம்போ(Clue Tambo) என்கிற விஞ்ஞானியால் 1930 ல் சூரிய குடும்பத்தைச் சுற்றிவரும் பொருளான ப்ளூட்டோ கண்டுபிடிக்கப்பட்டது.
ப்ளூட்டோ துவக்கத்தில் ஓர் கிரகமாகக் கருதப்பட்டது. ப்ளூட்டோ சூரியனில் இருந்து வெகு தொலைவில் உள்ளதால் இந்த கிரகம் முழுவதும் பனி படர்ந்து காணப்படும்.
மேலும் ப்ளூட்டோவின் பனிப் பரப்புக்குக் கீழ் பிரம்மாண்ட சமுத்திரங்களும் உள்ளன. பனி எரிமலைகள் கொண்ட ஒரே கிரகம் ப்ளூட்டோ மட்டுமே.
இப்படி ப்ளூட்டோவின் புகழ் உலகம் முழுக்க பரவிய நிலையில் 1990-களில் ப்ளூட்டோவின் கிரக அந்தஸ்து குறித்து முதன்முறையாக விஞ்ஞானிகளால் கேள்வி எழுப்பப்பட்டது.
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சிக் குழு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கூடியது. புளூட்டோ ஓர் கிரகத்துக்கான அந்தஸ்தை உண்மையில் பெற்றுள்ளதா என அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஒரு பொருள் கிரக அந்தஸ்தைப் பெற மூன்று விஷயங்களைச் செய்யவேண்டும்.
1. அந்தப் பொருள் மற்ற கிரகங்களைப் போல சூரியனைச் சுற்றிவர வேண்டும்.
2. உருளை வடிவத்தில் இருக்க வேண்டும்.
3. அதன் ஈர்ப்பு விசை மூலமாக அதன் சுற்று வட்டப் பாதையின் இடையே விண் கற்களை அகற்ற வேண்டும்.
ஆனால் ப்ளூட்டோ மிகச் சிறிய பனிக்கட்டிகளால் ஆன கிரகம் என்பதால் இதன் ஈர்ப்பு விசை மிகக் குறைவு. இதனால் ப்ளூட்டோவால் அதன் சுற்றுவட்டப் பாதையில் எதிர்வரும் பெரிய விண்கற்களை விலக்க இயலாது.
எனவே ப்ளூட்டோ கிரக அந்தஸ்தைப் பெற இயலாது என விஞ்ஞானிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். ஆனால் இதற்கு டுவார்ஃப் பிளானட் என்கிற சிறிய கிரகத்துக்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
ப்ளூட்டோ மட்டுமின்று அதன் அருகே உள்ள ஹோமியா, மேக் மேக் என்கிற சிறிய பொருட்களுக்கும் டுவார்ஃப் பிளானட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.