கனடிய பிரதமர் வெளியிட உள்ள விசேட அறிவிப்பு
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி, தெரிவு செய்யப்பட்டு நான்கு நாட்களுக்கு பின்னர், தனது அரசின் முக்கிய முன்னுரிமைகளை இன்று காலை அறிவிக்க உள்ளார்.
லிபரல் கட்சி தொடர்ந்து நான்காவது முறை ஆட்சி ஏற்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இன்று காலை 11 மணி அளவில், கார்னி ஊடகங்களுக்கு உரையாற்றி, கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளார்.
அமெரிக்காவுடன் நிலவும் வர்த்தக மோதல்களை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், அவர் செவ்வாயன்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் தொலைபேசி உரையாடல் நடத்தியுள்ளார்.
தேர்தல் இரவில் ஒட்டாவாவில் உள்ள ஹாக்கி அரங்கில் தேர்தல் வெற்றி தொடர்பில் உரையாற்றியதன் பின்னர், கார்னி இதுவரை பொதுமக்களுக்கு உரையாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.