கனடாவில் நிமோனியா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
கனடாவில் கடந்த ஆண்டில் நிமோனியா (Pneumonia) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 30 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய சுற்றாடல் தகவல் நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக 5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வயது பிரிவில் நிமோனியா காரணமான அனுமதிகள் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.
மோன்ரியாலில் உள்ள மொன்றியால் சிறுவர் மருத்துவமனை தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஜெஸ்ஸி பாப்பன்பர்க் கூறுகையில், 2024–2025 சுவாச நோய் பருவம் (respiratory illness season) நிமோனியா நோயாளிகளால் மிகப் பரபரப்பாக இருந்தது என்பதை புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
கடந்த ஆண்டின் கடுமையான காய்ச்சல் (flu) பரவல், நிமோனியா அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
வைரஸ் மூலம் ஏற்படும் நிமோனியா, காய்ச்சலின் ஒரு தீவிர விளைவாக அமையக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் தொற்று சுவாசக் குழாயில் உள்ள செல்களை பாதிப்பதால், பாக்டீரியாக்கள் எளிதில் உடலில் நுழைய வாய்ப்பு ஏற்படுகிறது.
இதனால் பாக்டீரியா நிமோனியா உருவாகும் அபாயம் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.