ஜப்பான் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடைய மூவர் கனடாவில் கைது
ஜப்பானிய பிரபல போதை பொருள் கும்பல் ஒன்றுடன் தொடர்புடைய மூன்று பேர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் டோபா மெயின் லேண்ட் பகுதி போலீசார் இந்த சந்தேகம் அவர்களை கைது செய்துள்ளனர் .
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் இந்த நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஜப்பானின் யக்கூசா குற்ற கும்பலுடன் இந்த மூவருக்கும் தொடர்பு உண்டு என போலீசார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த கும்பல் பல்வேறு திட்டமிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
12 கிலோ கிராம் எடையுடைய போதைப்பொருள் வகைகள் ஜப்பானுக்கு அனுப்பி வைக்க முயற்சித்த நிலையில் கனடிய எல்லை பாதுகாப்பு குழுவினர் அந்த போதை பொருட்களை மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் கைதான குழுவினர் ஜப்பானுக்கு போதை பொருட்களை அனுப்பி வைத்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய ஜப்பானில் இயங்கி வந்த இரண்டு பேரையும் அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.