பிரம்டனில் 5 பேர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட இருவர் கைது
பிராம்டன் பிரதேசத்தில் ஐந்து பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 11ஆம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் குயின் வீதி டிக்சி வீதி ஆகியனவற்றுக்கு அருகாமையில் உள்ள கட்டிடம் ஒன்றின் பின்பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பீல் பிராந்திய போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஐந்து பேர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்திய போதிலும் அதில் இரண்டு பேர் காயமடைந்ததுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
19 வயதான ஜெய்ஹிம் பவல் மற்றும் 23 வயதான எமலி நகுலேந்திரன் ஆகியோர் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து கொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பவல் இடம் இருந்து தடை செய்யப்பட்ட கருவி ஒன்றையும் போலீசார் மீட்டுள்ளனர் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.