யாசகம் எடுக்கும் முதியவரை தாக்கிய பொலிஸார்; நீதிபதியின் அதிரடி உத்தரவு!
அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் யாசகம் எடுத்து கொண்டு இருந்த முதியோர் ஒருவரை பொலிஸார் தாக்கியதை தொடர்ந்து, அவருக்கு $100 டொலர்கள் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று கூட்டாச்சி நடுவர் மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அட்லாண்டா நகரப் பகுதிகளில் ஜெர்ரி பிளாசிங்கேம்(Jerry Blasingame) (69) என்ற நபர் முதியவர் அங்கு வந்த வாகன ஓட்டிகளிடம் யாசகம் கேட்டுக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அந்த பகுதிக்கு வந்த பொலிஸ் அதிகாரி ஜான் க்ரப்ஸ்(Jon Grubbs), ஜெர்ரி பிளாசிங்கேம் வாகன ஓட்டிகளிடம் யாசகம் எடுப்பதை பார்த்துடன் அவரை தடுத்து நிறுத்தி அதிர்ச்சியளிக்கும் ஸ்டன் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அவரது உடல் முழுவதும் முடங்கியது
எதிர்பாரத தாக்குதலால் ஜெர்ரி மயக்கமடைந்து தரையில் விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜெர்ரி தரையில் விழுந்ததில் அவருடைய கழுத்து உடைந்துடன், அவரது உடல் முழுவதும் முடங்கியது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிளாசிங்கேமிற்கு தற்போது 24 நான்கு மணிநேர மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் பிளாசிங்கேம் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு கூட்டாச்சி நடுவர் மன்றத்தில் விசாரிக்கப்பட்டது, அப்போது பிளாசிங்கேமின் வழக்கறிஞர் வென் ஜான்சன் (Ven Johnson), பாதிக்கப்பட்ட நபருக்கு 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுவதுடன் அவரது 1வருட கண்காணிப்புக்கு ($1m)டொலர்களும் மருத்துவ சிகிச்சைகளுக்கு 14 ($14m)டொலர்களும் செலவு ஆகும் என தெரிவித்தார்.
இதனை விசாரித்த நீதிபதி, அட்லாண்டா பொலிஸ் நிர்வாகம் ($60m) டொலர்களும், ஜெர்ரி பிளாசிங்கேமை தாக்கிய அதிகாரி ஜான் க்ரப்ஸ் ($40m) டொலர்களும் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருப்பதாக அறிக்கைகள் வெளியாகி உள்ளன.
நீதிபதியின் இந்த உத்திரவினை பிளாசிங்கேமின் வழக்கறிஞர் வென் ஜான்சன் (Ven Johnson) வரவேற்றுள்ளார், மேலும் அதிகாரி ஜான் க்ரப்ஸ் ஆறு மாத நிர்வாக விடுப்பில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
அட்லாண்டா மற்றும் மிஸ்டர் க்ரப்ஸ் பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்டாசி ஜே. மில்லர், பாதிக்கப்பட்டவருக்கு காயங்கள் சோகமாக இருந்தாலும், காவல் துறையின் பயிற்சி மற்றும் டேசர் பயன்பாடு குறித்த கொள்கைகள் குற்றம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.