கனடாவில் மர்மமான முறையில் மூவர் மரணம்
கனடாவின் க்யூபெக் மாகாணத்தில் உள்ள கிட்டிகன் ஸிபி (Kitigan Zibi) சமூகத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிச்சி மிகேன் தெருவில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அங்கு ஒருவரை சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில் கண்டுபிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதே வீட்டில் காயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், பின்னர் அவர்கள் உயிரிழந்ததாகவும் பேச்சாளர் கூறினார்.

இந்த மரணங்கள் தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கிட்டிகன் ஸிபி, ஒட்டாவா நகர மையத்திலிருந்து சுமார் 148 கிலோமீட்டர் வடக்கில் அமைந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து க்யூபெக் மாகாண முதல்வர் பிரான்சுவா லெகோ சமூக வலைத்தளத்தில் தனது துயரத்தை தெரிவித்துள்ளார்.
கிட்டிகன் ஸிபியில் நிகழ்ந்த இந்த மரணச் சம்பவம் என்னை ஆழமாக உலுக்கியுள்ளது.
அனிஷினாபே (Anishinaabe) இன மக்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கும் இந்த கடினமான நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன் என்று அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.