ஹாமில்டன் பள்ளிவாசலில் கத்தி குத்து; மூவர் காயம்
ஹாமில்டன் நகர மையத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இடம்பெற்ற கத்தி குத்துச் சம்பவத்தில் தொடர்புடையதாக 40 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாமில்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல், யார்க் புலவர்ட் பகுதியில் உள்ள ஹமில்டன் பள்ளிவாசலுக்கு Hamilton Downtown Mosque-ல், எதிரில் ஏற்பட்ட மோதல், பள்ளிவாசல் உள்ளே வன்முறையாக மாறியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார் (அவரது உயிருக்கு ஆபத்து இல்லை), மற்றொருவர் நிகழ்விடத்திலேயே சிகிச்சை பெற்றார், மேலும் மூன்றாவது நபர் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறினார் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஹாமில்டன் மவுண்டனில் அமைந்துள்ள வீடொன்றில் வசிக்கும் அப்துல்லா அல்க்லிப் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாக்குதல் கொலை முயற்சி உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள் குறித்த நபர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
முதலில் இரண்டு சந்தேகநபர்கள் தொடர்பில் போலீசார் விசாரித்திருந்த போதிலும், விரிவான விசாரணை முடிவில், இரண்டாவது நபர் சம்பவத்தில் தொடர்புடையவரல்ல என்று உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேகநபர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள், என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.