சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் அதிகாரி விளக்கமறிளலில்
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணி ஒருவரை நேற்று காலை தாக்கியதாகக் கூறப்படும் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சட்டத்தரணி நீதிமன்றத்தில் முன்னிலையாகி பின்னர் வாகனத்தில் வெளியேற்ற முயன்றபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
சிறைச்சாலை பேருந்து ஒன்று நீதிமன்ற வளாகத்துக்குள் வந்ததன் காரணமாக, காவல்துறை அதிகாரி சட்டத்தரணியிடம் பேருந்து உள்ளே நுழையும் வரை காத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாய் தர்க்கம் ஏற்பட்டு பின்னர் தாக்குதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, காவல் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட போது சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இந்தநிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தாக்குதலைக் கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது, சம்பந்தப்பட்ட அதிகாரி தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.