கனடாவில் வீடொன்றின் மீது தொடர்ச்சியாக நான்காவது முறை துப்பாக்கிச் சூடு
கனடாவில் வீடொன்றின் மீது தொடர்ச்சயிாக நான்காவது தடவையாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. யோர்க் பிராந்திய காவல்துறை, வோன் நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
காவல்துறை தகவலின்படி, காலை சுமார் 5 மணியளவில் பத்தர்ஸ்ட் வீதி மற்றும் டெஸ்டன் சாலை அருகே அமைந்துள்ள ஒரு வீட்டின் முன்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் துப்பாக்கி சூட்டில் சேதமடைந்தது.
கருப்பு நிற காரில் வந்த ஒருவர் வீட்டின் முன்பாக நின்றபடி துப்பாக்கி சூடு நடத்தி தப்பியோடியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் பல துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
எந்த உயிரிழப்பும் அல்லது காயமும் ஏற்படவில்லை என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இது அந்த வீட்டில் இடம்பெறும் நான்காவது துப்பாக்கிச் சூடு எனவும், இதற்கு முன்பும் மூன்று முறை இதே வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது அண்மைய மாதங்களில் வோன் நகரில் இடம்பெற்ற தொடர் வீட்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடையதா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
காவல்துறை இதை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் எனக் கருதுகிறது.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால், இன்று முழுவதும் அந்தப் பகுதியில் அதிகமான காவல்துறை புலனாய்வாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.