கனடாவில் சட்டவிரோத சூதாட்ட மையம் சுற்றிவளைப்பு
கனடாவில் சட்டவிரோத சூதாட்ட மையம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
கனடாவில் ரிச்மண்ட் ஹில் பகுதியில் இவ்வாறு சூதாட்டம் மையம் ஒன்று இயங்கி வந்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் வீடு ஒன்றில் இந்த சூதாட்ட மையம் இயங்கி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என 18 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து இரண்டு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சூதாட்டம் மையத்திலிருந்து பெருந்தொகை பணமும் வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய 18 பேருக்கு எதிராக 22 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டிலும் சட்டவிரோத சூதாட்ட மையங்களில் நடத்திச் சென்ற பலர் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நபர்களிடமிருந்து பெருந்தொகை பணம் மீட்கப்பட்டிருந்தது.