துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் குறித்த புகைப்படங்கள் வெளியீடு
கனடாவின் மார்க்கமில் கடந்த வாரம் ஒரு நபர் தனது வீட்டுக்கு வெளியே துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்படும் இரண்டு சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை யார்க் பிராந்திய காவல்துறை வெளியிட்டுள்ளது.
சந்தேக நபர்கள் கறுப்பின ஆண்கள் எனவும், அவர்கள் கடைசியாக சாம்பல் நிற ஹூடட் ஸ்வெட்டர்கள் மற்றும் கருப்பு டிராக் பேன்ட்கள் அணிந்திருந்ததாகவும் காவல்துறை விவரித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு ஆகஸ்ட் 14 பிற்பகல் மெக்கோவன் சாலை மற்றும் 14வது அவென்யூ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டவர் துப்பாக்கி குண்டு காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்து இல்லாதவை என காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, விசாரணையாளர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பும் பின்பும் நடந்த நிகழ்வுகளைக் காட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
ஒரு ஆண் சந்தேக நபர், துப்பாக்கியைப் போல் தோன்றும் ஆயுதத்துடன் தெருவைக் கடந்து ஓடுவது வீடியோவில் காணப்பட்டது.
இது தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.