டொராண்டோவில் துன்புறுத்தல்களில் ஈடுபட்ட நபரைத் தேடும் பொலிஸார்
டொராண்டோவில் நபர் ஒருவரைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த மே மாதம் 26ஆம் திகதி, பே ஸ்ட்ரீட் மற்றும் ஜெரார்ட் ஸ்ட்ரீட் வெஸ்ட் பகுதியில் நடந்த குற்றவியல் துன்புறுத்தல் தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரைத் தொடர்புகொள்ளத் தொடர்ச்சியாகப் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் வான்கூவர், பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த 23 வயதான அலெக்சாண்டர் சோகோலோவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குற்றவியல் துன்புறுத்தல் மற்றும் நன்னடத்தை விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் 5 அடி 10 அங்குல உயரம் கொண்டவர், நடுத்தர உடல்வாகு, சிறிய பழுப்பு நிற முடி, பழுப்பு நிற கண்கள் மற்றும் முகத்தில் தாடியைக் கொண்டிருந்தார் எனவும், நீல நிறக் காற்சட்டை மற்றும் பழுப்பு நிற ஜாக்கெட் அணிந்திருந்தார் எனுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் உடனடியாக பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.