கனடாவில் காணாமல் போன 7 வயது சிறுமி
பிரிட்டிஷ் கொலம்பியா, சிலிவாக்கில் வசித்து வந்த 7 வயதான சிறுமி லிலி கூர்ஸொல் கடந்த வியாழன் பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சிறுமியை தேடும் அவசர நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
லிலி கடைசியாக Winona Road இல் 50800 பகுதியில் இன்று பிற்பகல் 4 மணியளவில் இருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி அண்டையவர்களின் நாய்களை பின்தொடர்ந்து காட்டுப்பகுதிக்குள் சென்றதாக தெரிகிறது, ஆனால் மீண்டும் திரும்பவில்லை,” என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது, வான் வழியாகவும் மற்றும் தரை வழியாகவும் பரந்த அளவிலான தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமி பற்றிய தகவல்கள் வருமாறு
• நிறம்: வெண்மைத் தோல்
• உயரம்: 4 அடி
• முடி: இளஞ்சாம்பு நிறம்
• கண் நிறம்: பழுப்பு
காணாமல் போன நேரத்தில் முழுக்க இளஞ்சிவப்பு (pink) ஆடைகள் அணிந்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
லிலியின் இருப்பிடத்தைப் பற்றிய எந்தவொரு தகவலும் இருப்பின், உங்கள் உள்ளுர் பொலிஸ் நிலையம் அல்லது Crime Stoppers (1-800-222-8477) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.