ரொறன்ரோவில் 12 வயது சிறுமியை காணவில்லை!
ரொறன்ரோவில் 12 வயது சிறுமி ஒருவரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ரொறன்ரோவின் நோர்த் யோர்க் பகுதியில் இந்த சிறுமி காணாமல் போயுள்ளார்.
சியுன் அகின்போலா (Seun Akinbola ) என்ற 12 வயதான சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கடந்த 29-ம் திகதி திங்கட்கிழமை மாலை 6.00 மணியளவில் சிறுமியை இறுதியாக பார்த்ததாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மெலிந்த உடலையும் கட்டையான தலை மயிரையும் கொண்டவர் என இந்த சிறுமி பற்றிய விபரிப்புக்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
வெள்ளைநிற சட்டை, வெள்ளைநிற கட்டை காற்சட்டை மற்றும் பிங்க் நிற பாதணி என்பனவற்றை இந்த சிறுமி அணிந்திருந்தார் என தெரிவித்துள்ளனர்.
இந்த சிறுமியின் பாதுகாப்பு குறித்து கரிசனை கொண்டுள்ளதாகவும் தேடுதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமி தொடர்பிலான ஏதேனும் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் 416-808-3200 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்னளர்.