24 வயது பெண் தொடர்பில் கனடா பொலிசார் விடுத்த கோரிக்கை
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மருத்துவமனைக்கு சென்ற பெண் ஒருவர் இதுவரை வீடு திரும்பாத நிலையில் பொலிசார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சென்ற 24 வயது Bailey Torbica என்பவர் இதுவரை குடியிருப்புக்கு திரும்பவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 8.40 மணியளவில் இவர் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. தீவிர மருத்துவ உதவி தேவைப்படும் கட்டத்தில் இருக்கும் Bailey Torbica தொடர்பில் தேடும் முயற்சிகள் மேற்கொண்டும் தோல்வியடைந்துள்ளதாகவே கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவரது உடல் நலனில் கவலை தெரிவித்துள்ள அதிகாரிகள், அவருக்கு மருத்துவ உதவிகள் எப்போதும் தேவைப்படும் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பெண் தொடர்பில் பொதுமக்கள் அக்கறையுடன் விசாரிக்க வேண்டும் எனவும், தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.