ஒன்றாரியோவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது
வடக்கு ஒன்ராறியோவின் கெனோரா பகுதியில் இரண்டு மாதங்களுக்கு அதிகமாக முன்னெடுக்கப்பட்ட போதைப் பொருள் கடத்தல் விசாரணையையடுத்து, 64 வயதான ஒருவரை ஒன்ராறியோ மாகாண பொலிஸார் கைது செய்துள்னர்.
மார்ச் 2025 இல் தொடங்கப்பட்ட இந்த விசாரணையில் ஒன்றாரியோ பொலிஸாரின் பல்வேறு பிரிவினரும் இணைந்து கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மே 6ஆம் திகதி, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவர் வசித்த வீட்டிலும் வாகனத்திலும் பொலிஸார் தேடுதல் நடத்தியுள்ளனர்.
சுமார் 370 கிராம் சந்தேகத்துக்கிடமான கோகெய்ன், 350 கிராம் மெத்தாம்பட்டமின், 235 ஒக்ஸிகோடோன் மாத்திரைகள், 3,000 ஹைட்ரோமோர்போன் மாத்திரைகள் மற்றும் 5,630 டொலர் ரொக்கம் என்பனவற்றை சந்தேக நபரிடமிருந்து, பொலிஸார் மீட்டுள்ளனர்.
போதைப்பொருள்களின் சந்தை மதிப்பு சுமார் 185,000 டொலர்கள் என ஒன்ராறியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.