ஒன்றாரியோவில் குழந்தையை மீட்க நாய் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்
ஒன்டாரியோ மாகாணத்தின் பாரி நகரத்திற்கு தென்மேற்கே உள்ள டண்டால்க் பகுதியில், ஒரு குழந்தையை கடித்த நாயை பொலிஸார் சுட்டு கொன்ற சம்பவம் பதிவாகியுள்ளது.
ரஸ்ஸல் தெருவில் ஒரு நாய் கட்டுப்பாடின்றி சுற்றித் திரிவதாக வந்த அழைப்பினைப் பெற்ற பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அந்த நாய் ஒரு குழந்தையை கடித்ததுடன், மற்றொரு குழந்தையை கடிக்க முயன்றுள்ளது.
நாயை சுட்டு கொன்ற பொலிஸார்
நாயின் உரிமையாளர் அதை அடக்க முடியாமல் போனதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் நாயை கட்டுப்படுத்த முயன்றபோது, அதில் ஒருவரும் நாயால் கடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பொலிஸார் நாயை சுட்டு கொன்றனர்.
பின்னர் அந்த நாய் உயிரிழந்தது. இந்த தாக்குதலில் இரண்டு பேர் லேசான காயங்களுடன் மீண்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஆக்கிரமிப்பு தன்மையுடைய அல்லது ஆபத்தான விலங்குகளை கண்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும், அவற்றை அணுக வேண்டாமெனவும் பொது மக்களை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.