அரசியல் நெருக்கடி; பராகுவே ஜனாதிபதி இராஜினாமா
வங்கி ஒன்று வீழ்ச்சியடைந்ததையடுத்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து பராகுவே (Paraguay) ஜனாதிபதி சாந்தியாகோ பெனா தனது பதவியியலை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
நான் ஏதேனும் ஒரு தருணத்தில் தவறிழைத்திருந்தால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளிச் செய்தியில் தெரிவித்தார்.

'உங்கள் நம்பிக்கைக்குத் துரோகம் செய்ய வேண்டும் என்பது எனது நோக்கமாக இருந்ததில்லை.' உயினோ வங்கி திவால் நிலையை எட்டியதையடுத்து அதன் அனைத்துச் செயல்பாடுகளும் முடக்கப்பட்டன.
இதனால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவ்வங்கியை நிர்வகித்த நிறுவனத்தில் கடந்த ஆண்டு வரை பங்குதாரராக இருந்த பெனாவும் முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.