கனடாவில் வேலை இழப்பு குறித்த பதற்றம் அதிகரிப்பு
கனடியர்கள் மத்தியில் வேலை இழப்புக்கள் குறித்த பதற்றம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட புதிய கருத்துக்கணிப்பின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவுடன் நடக்கும் வர்த்தக போரின் விளைவாக வேலை இழப்புக்கான அச்சம் ஏற்படுத்துவதாக 40 வீதமான கனடியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் பல தொழில் நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை குறைக்கத் தொடங்கியுள்ளன.
லெஜர் கருத்துக்கணிப்பில், மார்ச் 7 முதல் 10 வரை 1,500க்கும் மேற்பட்ட கனடியர்களை மாதிரியாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதில், ஒண்டாரியோ மாநிலத்தில் 50%-க்கு மேற்பட்ட பணியாளர்கள் வேலை பாதுகாப்பு தொடர்பில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இது நாட்டின் மிக அதிகமான விகிதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலை இழப்புக்கள் தொடர்பில் பெண்களை விடவும் ஆண்கள் அதிகளவு கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து தரப்பிலும் வேலை இழப்புக்கான அச்சம் இருப்பதால், கனடாவின் பொருளாதாரத்தில் நெருக்கடி நிலவி உள்ளது.