பிரான்சிஸ் பரிசுத்த பாப்பரசர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
சுகயீனம் காரணமாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று (14) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
88 வயதாகும் பரிசுத்த பாப்பரசர் கடந்த சில வாரங்களாக சுவாசிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டிருந்ததாகவும், இதன் காரணமாக தனது உரைகளை வாசிக்கும் பொறுப்பை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இன்று காலை ஆராதனை நிகழ்விற்குப் பிறகு அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவமனையில் அவருக்கான தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வத்திக்கான் மருத்துவ அதிகாரிகள் பாப்பரசரின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தற்போதைய நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கான் விரைவில் மேலதிக தகவல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் கத்தோலிக்க பக்தர்கள் அவரது உடல்நலத்திற்காக சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.