மருத்துவமனையில் குழந்தைக்கு போப் ஞானஸ்நானம் அளித்த போப் பிரான்சிஸ்!
சமீப காலமாக போப் பிரான்சிஸ் (Pope Francis) முதுமை தொடர்பான உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் போப் பிரான்சிஸ் சுவாசத் தொற்றுநோய் காரணமாக ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவாசத் தொற்றுநோய் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றும் சில நாட்களுக்கு மருத்துவமனையில் ஓய்வில் இருப்பார் என்றும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், போப் பிரான்சிஸ் தான் சிகிச்சை பெற்று வரும் அதே மருத்துவமனையில் பிறந்த குழந்தை ஒன்றிற்கு ஞானஸ்நானம் அளித்தார்.
அந்த மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவுக்கு சென்ற அவர், புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்றிற்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.
மேலும் மருத்துவமனையில் உள்ள இளம் நோயாளிகள் மற்றும் புற்று நோயாளிகளை சந்தித்து போப் பிரான்சிஸ் ஆறுதல் தெரிவித்தார்.